வழக்கில் சிக்கிய வாகனங்கள் அகற்றப்படுமா? நகராட்சி கடிதத்தை உதாசீனப்படுத்திய போலீஸ்

Added : பிப் 14, 2020
Advertisement
 வழக்கில் சிக்கிய வாகனங்கள் அகற்றப்படுமா? நகராட்சி கடிதத்தை உதாசீனப்படுத்திய போலீஸ்

தாம்பரம்:காவல் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, வழக்குகளில் சிக்கிய வாகனங்களை அகற்றக் கோரி, நகராட்சி அதிகாரிகள் வழங்கிய கடிதத்தை பொருட்படுத்தாமல், போலீசார் உதாசீனப்படுத்தும் வகையில், நடந்து கொள்வதாக, புகார் எழுந்துள்ளது.

தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட, முத்துலிங்கம் தெருவில், தாம்பரம் காவல் நிலையம் அமைந்து உள்ளது. புலனாய்வு பிரிவுஇக்காவல் நிலையத்தின், இரண்டாவது தளத்தில், குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.அப்போது, விபத்து வழக்குகளில் சிக்கிய வாகனங்கள், காவல் நிலையத்தின் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

சமீபத்தில், போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சிட்லபாக்கம் காவல் நிலையம் திறக்கப்பட்ட பின், அக்காவல் நிலையத்தின், இரண்டாம் தளத்திற்கு மாற்றபட்டது.அப்போது, விபத்து வழக்குகளில் சிக்கிய வாகனங்களை, அங்கு எடுத்துச் செல்ல, தாம்பரம் போலீசார் அறிவுறுத்தினர்.அதற்கு, ஒன்றிரண்டு வாகனங்களை மட்டும் அகற்றிய, புலனாய்வு பிரிவு போலீசார், பெரும்பாலான வாகனங்களை, தாம்பரத்திலேயே விட்டுச் சென்றனர்.

இதனால், காவல் நிலையம் அருகில் உள்ள, திருமண மண்டபத்தில், சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது முத்துலிங்கம் தெரு சாலையில்,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,போலீசாரின் வாகனங்கள் கூட செல்ல முடிவதில்லை. வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் போக்கு வரத்து நெரிசலுடன், அப்பகுதி, திறந்தவெளி கழிப்பிடமாகவும் காட்சி அளிக்கிறது.


நடவடிக்கை



திருமண மண்டபம் அருகில் உள்ள, கோவிலுக்கு வருவோரும், முகம் சுளித்தபடியே கோவிலுக்கு சென்று வருகின்றனர்.இது குறித்து, தாம்பரம் நகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு, ஆய்வாளருக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பினர். ஆனால், நகராட்சி அதிகாரிகளின் கடிதத்தை உதாசீனப்படுத்தும் வகையில், போலீசார் வாகனங்களை அகற்றாமல் உள்ளனர்.உயர் அதிகாரிகள் தலையிட்டு, இந்த வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜி.பாபு, 45, சமூக ஆர்வலர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X