ஆமை வேகத்தில் நகரும் மூன்றாவது ரயில் பாதை பணி

Added : பிப் 14, 2020
Advertisement
 ஆமை வேகத்தில் நகரும் மூன்றாவது ரயில் பாதை பணி

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மூன்றாவது ரயில் பாதை பணி மந்தகதியில் நடப்பதால், பயணியர் அதிருப்திஅடைந்துள்ளனர்.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 256 கோடி ரூபாய் செலவில், மூன்றாவது ரயில் பாதை பணி, 2016, பிப்ரவரியில் இருந்து, நடந்து வருகிறது. ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்பாதை நான்கு ஆண்டு கள் ஆகியும் இன்னும் முடிந்த பாடில்லை. இதனால், ஏரியா மக்கள் அதிருப்தியடைந்துஉள்ளனர்.

தற்போதைய நிலை

● தாம்பரம் - பெருங்களத்துார் - வண்டலுார், ஊரப்பாக்கம் இடையே, மூன்றாவது பாதைக்கு இன்னும் மண் நிரப்பவில்லை● ஊரப்பாக்கம் - கூடுவாஞ்சேரி இடையே மண் நிரப்பும் பணி நடக்கிறது. கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோவில் இடையே, தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது

● சிங்கப்பெருமாள்கோவில் - பரனுார் வரை தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்து, நிலையங்களில், இணைப்பு பணி நடந்து வருகிறது. வழியில் உள்ள நிலையங்களில் பிளாட்பாரம் பணிகள் முடிந்துள்ளன

● ஊரப்பாக்கம் - கூடுவாஞ்சேரி இடையே, மூன்றாவது பாதையில், ஐந்து கண் பாலம் வேலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையங்கள் இடையே, பாதைக்கு மண் நிரப்பும் பணி, மந்தகதியில் நடக்கிறது

● பெருங்களத்துார் - வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே, பாதைக்கு மண் நிரப்பும் பணிகூட இன்னும் துவங்கவில்லை.

இப்பாதை பணி குறித்து, செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி பயணியர் அதிருப்தியுடன் கூறியதாவது:ஒன்றரை ஆண்டு களில் முடிக்க வேண்டிய பாதை பணிகள், நான்கு ஆண்டுகள் ஆகியும் முடிந்தபாடில்லை. இப்பாதை பணி வரும், நவம்பருக்குள் முடிக்கப் பட்டு, ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என, 2019 ஆகஸ்டில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

சிறிய, பெரிய பாலப்பணிகள் முடிந்துள்ள நிலையில், இரும்புலியூர் மற்றும், பரனுாரில் நடக்கும் ரயில்வே பாலம் விரிவாக்க கட்டுமான பணி மந்தகதியில் நடப்பதால்,பணி முடிவதற்கு இன்றும் ஓராண்டு காலம் ஆகும் என்கின்றனர்.தாம்பரம் - செங்கல்பட்டு இடையே உள்ள ஊர்களில், கடந்த மூன்றாடுகளில், வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக, 10 லட்சம் பேர் வரை குடியேறியுள்ளனர்.

இப்பாதையில் உள்ள, வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு, வார நாட்களில் தினமும், 20 ஆயிரம் பேர் வரையும், விடுமுறை நாட்களில், 30 ஆயிரம் பேர் வரையும் வந்து செல்கின்றனர். அதிகமானோர் மின்சார ரயில்களில் வந்து செல்வதால், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மின்சார ரயில்களில் நெருக்கடி அதிகமாகி பெட்டியில் நிற்பதற்கு இடமின்றி, வாயிலில் தொங்கியபடி பயணியர் ஆபத்தான பயணம் செய்வது தொடர்கிறது.

இந்நிலை தவிர்க்கப்பட, இப்பாதை பணியை இவ்வாண்டு இறுதிக்குள்ளாவது முடித்து, பயணியர் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, பயணியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X