பந்தல்குடி கால்வாயில் சுத்திகரிப்பு மைய பணி தீவிரம் மூன்று மாதங்களில் முடிக்கவும் உத்தரவு| Dinamalar

தமிழ்நாடு

பந்தல்குடி கால்வாயில் சுத்திகரிப்பு மைய பணி தீவிரம் மூன்று மாதங்களில் முடிக்கவும் உத்தரவு

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
 பந்தல்குடி கால்வாயில் சுத்திகரிப்பு மைய பணி தீவிரம் மூன்று மாதங்களில் முடிக்கவும் உத்தரவு

மதுரை: மதுரையில் கழிவுநீரால் வைகையை பாழ்ப்படுத்தும் பந்தல்குடி கால்வாய் குறுக்கே ரூ. 3.15 கோடி சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மூன்று மாதங்களில் முடிக்க கமிஷனர் விசாகன் உத்தரவிட்டு்ள்ளார்.
மதுரை வைகையில் மட்டும் 30 இடங்களில் கழிவுநீர் கலப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் பிரதானமான பந்தல்குடி கால்வாய் மூலம் தினமும் 10 லட்சம் லிட்டர் வரை கழிவு நீர் சேருகிறது. இதை தடுக்க மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி பின்புறம் பந்தல்குடி கால்வாயில் ரூ. 3.15 கோடி செலவில் சுத்திகரிப்ப மையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. மையம் அமைக்கும் பணி கடந்த டிசம்பரில் துவங்கியது. தற்போது சுத்திகரிப்பு தொட்டிகள் கட்ட கால்வாயின் ஒரு பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. பின் ராட்சத தொட்டிகள் கட்டப்படும். கழிவு நீர் இத்தொட்டிகளில் செலுத்தப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட நீராக வெளியேறும் இப்பணியை மூன்று மாதங்களில் முடிக்க கமிஷனர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.
கமிஷனர் கூறுகையில் இக்கால்வாய் கழிவு நீரை தடுத்துவிட்டாலே வைகையை பெருமளவு சுத்தப்படுத்திவிட முடியும் , பிற இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X