பொது செய்தி

தமிழ்நாடு

பிப்., 21ல் வீட்டுவசதி கண்காட்சி

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை:'சென்னையில், 15 ஆயிரம் வீடுகள் விற்பனைக்கான, 'பேர்புரோ - 2020' வீட்டுவசதி கண்காட்சி, பிப்., 21ல் துவங்கும்' என, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' அறிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்த அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் டபிள்யு.எஸ்.ஹபீப், துணை தலைவர் எஸ்.சிவகுருநாதன் ஆகியோர் கூறியதாவது:பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறப்பட்டாலும், புதிதாக வீடு வாங்குவோர் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து வருகிறது. சில ஆண்டுகளாக, விலை உயராத நிலையில், இயல்பான அளவில் வீடுகள் விற்பனை நடக்கிறது.

நிலத்தின் விலை, கட்டுமான பொருட்கள் விலையில் மாற்றம் இல்லாததால், இதற்கு மேல் வீடுகள் விலையை குறைக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, பொதுமக்கள், தற்போதைய சூழலை பயன்படுத்தி, வீடு வாங்குவது நல்லது. இதை ஊக்குவிக்கும் வகையில், 'பேர்புரோ -2020' வீட்டுவசதி கண்காட்சி, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், பிப்., 21ல் துவங்குகிறது.

மூன்று நாட்கள் நடக்கும் இதில், கிரெடாய் அமைப்பைச் சேர்ந்த, 70 நிறுவனங்களின், 400 திட்டங்கள் காட்சிப்படுத்தப்படும்.இத்திட்டங்களில், மொத்தம், 15 ஆயிரம் வீடு, மனைகள் உள்ளன. இவை, 10 லட்சம் ரூபாய் முதல், 10 கோடி ரூபாய் வரையிலான விலையில் இருக்கும். இதில், அனைத்து திட்டங்களும், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டவை.

மேலும், இக்கண்காட்சியில், கட்டி முடிக்கப்பட்டு, குடியேற தயாரான நிலையில் பெரும்பாலான வீடுகள் இடம் பெறும். குறைந்த விலை வீடுகளுக்கான வரையறை மாற்றப்பட்டுள்ளதால், ஒரு சதவீதம் ஜி.எஸ்.டி.,யில், மக்கள் வீடுகள் வாங்க முடியும்.கட்டுமான நிறுவனங்களின், சேவை குறைபாடு குறித்த புகார்களை தீர்ப்பதற்காக, கிரெடாய் அமைப்பின் குறை நிவர்த்தி பணிகள் குறித்த தனி அரங்கு அமைக்கப்படுகிறது. இக்கண்காட்சியை, துணை முதல்வர் பன்னீர் செல்வம் துவக்கி வைக்கிறார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X