ஜல்லிக்கற்களால் வாகன விபத்து

Added : பிப் 14, 2020
Advertisement

தேவதானப்பட்டி, சில்வார்பட்டி -- ஜெயமங்கலம் வழித்தடத்தில் ஒட்டுப்பாலம் அருகில் ஜல்லிக் கற்கள் கொட்டி கிடப்பதால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.பெரியகுளம் பஸ் ஸ்டாண்டில் இருந்து வத்தலகுண்டுக்கு பஸ்கள் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, தேவதானப்பட்டி வழியாக செல்கின்றன. வட மாவட்டங்களில் இருந்து வைகை அணை, மூணாறு, தேக்கடிக்குசுற்றுலா வாகனங்கள்தேவதானப்பட்டி,சில்வார்பட்டி, ஜெயமங்கலம் வழியாகச் செல்கின்றன.இதில் சில்வார்பட்டி -- ஜெயமங்கலம் வழித்தடத்தில் ஒட்டு பாலம் அருகில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. இதனால் இரவு நேரங்களில் வரும் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றன.எனவே காரணமே இல்லாமல் கொட்டப்பட்டுள்ள ஜல்லிக் கற்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X