பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' தரவரிசை கருத்து தெரிவிக்க அழைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை:'ஸ்மார்ட் சிட்டி திட்ட தரவரிசை மதிப்பீட்டிற்கு, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்' என, சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சகத்தின் சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' நகரங்களுக்கு, சிறப்பான வாழ்வாதார குறியீட்டின் அடிப்படையில், தரவரிசை கணக்கெடுப்பு நடத்துகிறது. இந்த கணக்கெடுப்பு, 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதாரத் திறன், நிலைத்தன்மை ஆகிய மூன்று அங்கங்களாக, கணக்கெடுப்பு நடைபெற உள்ளன. இதில், கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, தங்குமிடம், துாய்மை, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பு, பயண வசதி, பொழுது போக்கு அம்சங்கள், பொருளாதார மேம்பாடு, வாய்ப்புகள், சுற்றுச்சூழல் பசுமை மற்றும் கட்டடங்கள், எரிசக்தி நுகர்வு, நகர மின்சக்தி உட்பட, 14 பிரிவுகளாக உள்ளன.

மேலும், 50 காரணிகளை கொண்டு, தரவரிசை கணக்கெடுப்பு மதிப்பிடப்படுகிறது. பொது மக்களின் கருத்துக்களை அறிய, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சகம், http://eol2019.org/CitizenFeedback%2c என்ற இணையதளத்தில், 'சிட்டிசன் பெர்செப்ஷன்' கீழ், கருத்துக்களை பதிவு செய்யும் கேள்வி படிவத்தை வடிவமைத்து உள்ளது.

பொதுமக்கள் இந்த ஆய்வில் பங்கேற்று, சென்னை குறித்த தங்கள் கருத்துகளை பதிவிட வேண்டும். மேலும், 'மை சிட்டி மை பிரைட்' என்ற தலைப்பில், 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநுால் வாயிலாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X