கழிவுநீர் வடிகால் சேதம்

Added : பிப் 14, 2020
Advertisement


ஆண்டிபட்டி --- வைகை ரோட்டில் உள்ள கழிவுநீர் வடிகால் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. கழிவுநீருடன் குப்பை கலந்து சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பி.விஸ்வநாதன், ஆண்டிபட்டிபூட்டிக் கிடக்கும் எம்.எல்.ஏ., அலுவலகம்ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,அலுவலகம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. அலுவலக வளாகத்தில் குப்பை குவிந்து வருகிறது. இந்த அலுவலகத்தை பயன்படுத்தவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.பிரகாஷ், ஆண்டிபட்டி------------ரோடு பணியில் தாமதம்ஆண்டிபட்டியில் இருந்து கதிர்நரசிங்கபுரம், வண்டியூர் வழியாக பாலக்கோம்பை செல்லும் ரோட்டை சீரமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-என்.சந்திரன், கதிர்நரசிங்கபுரம்-------சுகாதாரக்கேடு-பெரியகுளம் பட்டாளம்மன் தெருவில் போதுமான சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடை வசதி செய்துதருவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.காளியம்மாள், பெரியகுளம்.ஆக்கிரமிப்பால் பாதிப்புபெரியகுளம் தென்கரை தினசரி மார்க்கெட் செல்லும் பகுதியில் இருபுறமும் கடைகள் மற்றும் நடைபாதை கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கே.சுல்தான், பெரியகுளம்.பொதுக்கழிப்பறை தேவைடி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சக்கம்பட்டி சத்யா நகரில் பெண்களுக்கான பொதுக்கழிப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதி பெண்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இன்னும் நடவடிக்கை இல்லாதாதல் சிரமப்படுகின்றனர்.-ஆ.சக்திவேல், சக்கம்பட்டி----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X