மாசடைந்த சுனைநீர்; பயனற்ற சுகாதார வளாகம் : கோயிலில் சிரமத்தில் பக்தர்கள்| Dinamalar

மாசடைந்த சுனைநீர்; பயனற்ற சுகாதார வளாகம் : கோயிலில் சிரமத்தில் பக்தர்கள்

Added : பிப் 14, 2020
Share

போடி போடி அருகே தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயிலில் மாசமடைந்த சுனைநீர், பயனற்ற சுகாதார வளாகம், சுற்றுச்சுவர் சேதத்தால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். போடி ஒன்றியம் கோடாங்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட போடி -- தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயில். ஆண்டு தோறும் சித்திரை முதல் தேதியில் திருவிழா நடக்கும். எப்போதும் வற்றாத நிலையில் மூலிகை கலந்து சுனை நீர் வரும் வகையில் தொட்டி அமைந்துள்ளது.இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனை நீரில் நீராடுவர். இதோடு பழநி முருகன், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலையணிய நீராடி செல்வதற்கு புனித இடமாகும். சுனை நீர் அமைந்துள்ள தொட்டி பகுதியில் மண்கழிவுகள், தண்ணீர் மாசடைந்து செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் நீராட சிரமம் அடைந்துள்ள நிலையில் சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே சுகாதார வளாகம், உடை மாற்றும் அறை கட்டடம் கட்டப்பட்டும், உரிய பராமரிப்பு, தண்ணீர் வசதியின்றி பயனற்று முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நீராடுவோர் சிரமப்படுகின்றனர். ஓராண்டிற்கு முன் ரூ. பல லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் தரமற்ற பணியால் சில மாதங்களிலே முழுவதும் சேதமடைந்து தரைமட்டமாகியுள்ளதுசுனை தொட்டியை சுத்தப்படுத்தி, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, சுற்றுச்சுவரை தரமான முறையில் கட்டி, திருவிழா சமயங்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அறநிலைய துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X