தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய தேனி காளைக்கு பயிற்சி: பரிசுகளை குவிக்க 'ரெடி'

Added : பிப் 14, 2020
Advertisement

தேனி வாடிவாசல் வழியே திமிறும் காளை'களையும், அதன் கொம்புப்பிடிக்காக காத்திருக்கும் காளையர்களின் வீரம் செறிந்த திறன்களையும் நம் கண் முன் காட்சிப்படுத்தி தமிழனின் வீரத்தை உலகத்திற்கே பறைசாற்றுகின்றன ஜல்லிக்கட்டு போட்டிகள். வாடிவாசல்களில், உள் தொழுவக்கட்டில் தமிழ் என்ற காளையின் நுனிவால் தெரிந்தாலே வெளியே வெறிச்சோடிவிடும். மாடுபிடி வீரர்களுக்கு தமிழை பார்த்தாலே அச்சம் தொற்றிக்கொள்ளும். ஜல்லிக்கட்டு மைதானத்தைச் சுற்றிலும் மேடை அமைக்கப்பட்ட கால்களுடன், பதுங்குவர் அவர்கள்.அவ்வாறு எளிதில் அடக்க ஆளின்றி ஒரு சுற்றுச்சுற்றி திமிராய் நடைபோட்டு, ஆண் சிங்கங்களா தொட்டுப்பாருங்க' என, தனது திமிலை நிமிர்த்தி கம்பீரம்காட்டி ஜல்லிக்கட்டு மைதானங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது தேனி அல்லிநகரத்தை சேர்ந்த துரைராஜ் -- சாரதா தம்பதி மகன் நாகேந்திரன் வளர்க்கும் காங்கேயம் காளை தமிழ்குமரன். பிப்.16 அய்யம்பட்டி, பல்லவராயன் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது.நாகேந்திரன் கூறியதாவது : காளையை நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவையில் ரூ.65 ஆயிரத்திற்கு வாங்கி வளர்த்து வருகிறேன். விற்றவர்கள் தமிழ்குமரன் என பெயரிட்டு அழைத்தார்கள். நான் தற்போது தமிழ் என பாசமாக அழைத்து வருகிறேன். தினமும் ரூ.2,500க்கு டிராக்டரில் வயல்களில் உழுவதற்குச் செல்வேன். அதில், கிடைக்கும் வருமானத்தில் ரூ.500ஐ முதல் பங்குத்தொகையாக என் தமிழுக்கான தீவனத்திற்காக செலவழிப்பேன்.குச்சிப் புண்ணாக்கு, கருக்கால், பருத்திவிதை, உளுந்தம்பருப்பு தோல் அரவை, நயம் தவிடு, கேப்பைப் புண்ணாக்கு உள்ளிட்டவற்றை கலக்கி தினமும் மூன்று முறை வழங்க வேண்டும். காலையில் ரூ.100 மதிப்பில் மக்காச்சோளத் தட்டைகள், சீமைப்புல்களை வழங்க வேண்டும்.மாலையில், இரவில் இதுபோல வழங்குகிறேன். ஜல்லிக்கட்டு பழக்கத்திற்கு வாரத்திற்கு 2 முறை நீச்சல் பயிற்சியையும், தினமும் 4 கி.மீ., நடை பயிற்சியையும், தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை மூங்கணாங்கயிறு எடுத்து, வீரியம் ஏற்றுவதற்காக மாதிரி வாடிவாசல் அமைத்து, ஏறுதழுவுதல் பயிற்சியும் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளோம். தமிழுக்கு நான்கு வயதாகிறது. நானும், தம்பி சித்திரைக்குமார் மட்டும் அருகில் செல்ல முடியும். மற்றவர்கள் சென்றால் துாக்கி எறிந்துவிடுவான். ஆனால், தொடர்ந்து அருகில் இருந்து பழகினால் ஒரு நீண்ட கால நண்பனைப் போல நம்மிடம் பழக ஆரம்பித்துவிடுவான்.ஊக்குவிக்க வேண்டும்இதுவரை 8 ஜல்லிக்கட்டு போட்டிகளில் வாடிவாசலில் களம் கண்டிருக்கிறது. ஒரே ஒரு போட்டியில் பிடிபட்டுள்ளது. மற்றவற்றில் பிடிமாடு இல்லாமல் 4 கிராம் தங்கக்காசு, 26 கிராம் வெள்ளி, அண்டா, ஹாட் பாக்ஸ், கட்டில், பீரோ, பரிசுப் பொருட்கள் ஏராளம் பெற்று, எங்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் கூட, உள்ளூர் மாடு வளர்போருக்கு அனுமதி மறுப்பது வேதனை அளிக்கிறது. அந்த நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரிய காங்கேயம் காளைகள், நாட்டு ரக காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகம் பங்கேற்க வைக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்கி ஊக்குவிக்க வேண்டும், என்றார். இவரிடம் பேச 97906 78408

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X