உலக பயறுகள் தினம் கம்பத்தில் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக பயறுகள் தினம் கம்பத்தில் கொண்டாட்டம்

Added : பிப் 14, 2020
Share
கம்பம் கம்பம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உலக பயறுகள் தினம் கொண்டாடப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் அறிவழகன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் மகாவிஷ்ணு, பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். உதவி வேளாண் அலுவலர் சதீஷ், பயறு வகை பயிர்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் , உதவிகள் குறித்து விளக்கினார்.தேசிய உணவு

கம்பம் கம்பம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், உலக பயறுகள் தினம் கொண்டாடப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் அறிவழகன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் மகாவிஷ்ணு, பயறு வகை பயிர்களின் முக்கியத்துவம், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார். உதவி வேளாண் அலுவலர் சதீஷ், பயறு வகை பயிர்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் , உதவிகள் குறித்து விளக்கினார்.தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் சுழற்கலப்பை, விசைத்தெளிப்பான், தார்பாலின் வாங்குவது பற்றி உதவி வேளாண் அலுவலர் மலர்விழி பேசினார். உழவன் செயலி பதிவிறக்கம் பற்றியும் கூறினார். விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விசைத்தெளிப்பான், உளுந்து விதைகள், தார்பாலின் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவிவேளாண் அலுவலர் முருகேசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரிஷீலா செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X