ஏல மையங்களுக்கு ஏலக்காய் வரத்து குறைகிறது : வர்த்தகத்தை ரத்து செய்யும் அவல நிலை

Added : பிப் 14, 2020
Advertisement



கம்பம், 'இ ஆக்சன்'(ஏல) மையங்களுக்கு ஏலக்காய் வரத்து குறையத் துவங்கியுள்ளது. இதனால் பல நிறுவனங்கள், தங்களின் வர்த்தகத்தை ரத்து செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் தமிழத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் ஏலத்தோட்டங்கள் உள்ளன. கடும் மழை, வெயில், பனி என மாறி மாறி சீதோஷ்ணநிலை நிலவுவதாலும், கடந்த பல மாதங்களாக மழை இல்லாததாலும் இடுக்கி மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தோட்டங்களில் கிணறுகளில் இருந்த தண்ணீர் அடித்து முடித்தாகி விட்டது. தற்போது அவற்றிலும் தண்ணீர் இல்லை. இதனால் செடிகளை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஏல ஆக்சன் மையங்களில், காய் வரத்து குறைவாக இருப்பதால், பல நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை ரத்து செய்து வருகின்றன.முன்னணி ஏல மையத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, வாரத்தின் ஏழு நாட்களும்தினமும் காலை, மாலை என இரண்டு நிறுவனங்கள் ஏலக்காய் வர்த்தகம் நடத்துகிறது. மொத்தம் 12 நிறுவனங்கள் உள்ளன. தற்போது சீசன் முடியும் நிலை என்பதால், காய் வரத்து குறைவாக உள்ளது. ஒரு ஆக்சனுக்கு சராசரியாக 30 ஆயிரம் கிலோ வருகிறது. இது எல்லா நிறுவனங்களிலும் கிடையாது. மிகவும் குறைவாக வரத்து உள்ள நிறுவனங்கள், தங்களின் வர்த்தகத்தை ரத்து செய்து வருகின்றனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X