பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்பொருளான வேளாண் அலுவலர் குடியிருப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

போடி போடி பகுதியில் வேளாண் அலுவலர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் பல ஆண்டாக பயன்பாடின்றி சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக உள்ளது.போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வேளாண் அலுவலர்கள் தங்கி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க, ரூ. பல லட்சம் மதிப்பில் அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டன. திறக்கப்பட்ட நிலையில் சில ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தினர்.அதன்பின் பயன்படுத்தாததால் கட்டடம் பயன்பாடின்றி பல ஆண்டாக காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வளாகத்தில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது.வேளாண் அலுவலர் குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X