தமிழ்நாடு

வாசனைதரும் மருகு இலை சாகுபடி... துவக்கம் ஆண்டிபட்டி விவசாயிகள் ஆர்வம்

Added : பிப் 14, 2020
Advertisement

ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி பகுதியில் பூ மாலைகளில் வாசனைக்காக தொடுக்கப்படும் மருகு இலைகள் சாகுபடி துவங்கி உள்ளது. இதில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியில் காய்களுக்கு மாற்றுப்பயிராக பூக்கள், வாசனை தரும் மரிக்கொழுந்து, மருகுசெடிகள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது துவங்கி உள்ள வெயிலில் தாக்கம் மருகு சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளதாக இதில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சித்தார்பட்டி, ஜி.உசிலம்பட்டி, அம்மாபட்டி, தெப்பம்பட்டி உட்பட பல்வேறு பகுதியில் மருகு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.மணல் கலந்த மண், நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் மருகு செடிகள் செழித்து வளரும் என்பதால் இதனை தேர்வு செய்கின்றனர். தொடர் மழை அல்லது சாரல் பெய்தால் மருகுசெடிகள் அழுகி விடும்.விவசாயிகள் கூறியதாவது:இச்செடிகள் நடவு செய்த ஒரு மாதத்தில் பலன் தரும். ஒரு ஏக்கரில் 5 டன் வரை வாசனை தரும் இலைகள் எடுக்க முடியும். அதன்இலைகளுக்கான தேவை எப்போது இருக்கும் என்று கணிக்க முடியாது. கிலோ ரூ. 50 முதல் ரூ. 150 வரை கூட விலை கிடைக்கும். கிலோ ரூ. 20 ஆக விலை குறைந்தாலும் நஷ்டம் ஏற்படாது,என்றனர்.--------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X