முல்லைப்பெரியாற்றில் மணல் திருட்டு அமோகம்

Added : பிப் 14, 2020
Advertisement

கூடலூர், முல்லைப்பெரியாற்றில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில் மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது.பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 100கனஅடியாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், லோயர் கேம்பில் இருந்து தேனி வரை உள்ள முல்லைப் பெரியாற்றில் நீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கூடலூர், லோயர்கேம்ப், குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதிகளில் ஆற்றில் இருந்து மணல் திருட்டு துவங்கியுள்ளது.இப்போதே இதனை தடுக்க கனிம வளத்துறையினரும், பொதுப்பணித் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். மணல் கடத்தும் வாகனங்கள் அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாகவே செல்கின்றன. இதற்கு இடம்கொடுக்காமல் கனிம வளத்தை பாதுகாக்க விவசாயிகளும் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X