சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போடியில் புகையிலை விற்ற கடைகளுக்கு 'சீல்'

Added : பிப் 14, 2020
Advertisement

போடி, போடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.போடியில் புகையிலை, பான்பராக் உள்ளிட்ட போதைபாக்குகள் பெட்டிக்கடைகளில் வைத்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இங்கு பஸ்ஸ்டாண்ட், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்யா , அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.வெங்கடேசன், பாலு, சீதாலட்சுமி, காளிதாஸ் ஆகியோரின் கடைகளில் விற்பனைக்காக புகையிலை உள்ளிட்ட போதை பாக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், நான்கு பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதனை செலுத்தும் வரை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. புகையிலை, கலப்படம், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X