குழந்தைகள் பாதுகாப்பில் கவனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பில் கவனம்

Added : பிப் 14, 2020
Share

அன்னுார்:பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டது. கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி தரப்பட்டது.அன்னுார் வட்டார வள மையத்தில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.கருத்தாளர்கள் பேசுகையில். 'பள்ளியில் சுவர், தரைத்தளம், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி உள்ளதா என, பார்க்க வேண்டும்.மாணவர்கள் ஆரோக்கியமாக உள்ளனரா, என்று கவனிக்க வேண்டும். உளவியல் ரீதியாகவும், கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்,' என்றனர்.அன்னுார் வட்டாரத்தில், 315 ஆசிரியர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி, 11ம் தேதி துவங்கி, 13ம் தேதி முடிகிறது. இதில், ஒருங்கிணைந்த கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்புலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X