பொது செய்தி

தமிழ்நாடு

அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வருமா? சுல்தான்பேட்டை ஒன்றிய மக்கள் தவம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement

சூலுார்:அவசர மருத்துவ உதவிக்கு, 108 ஆம்புலன்ஸ் கிடைக்காமல், சுல்தான்பேட்டை சுற்றுவட்டார கிராம மக்கள், பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.கோவை மாவட்டத்தின் தென் கிழக்கு எல்லைப் பகுதியில், சுல்தான்பேட்டை ஒன்றியம் உள்ளது. பாப்பம்பட்டி, வாரப்பட்டி, செலக்கரிச்சல், குமாரபாளையம், ஜல்லிப்பட்டி உள்ளிட்ட 20 ஊராட்சிகள், 90-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.விவசாயம், கைத்தறி, கோழிப்பண்ணை, ஸ்பின்னிங் மில், காற்றாலைகள், கொப்பரை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இல்லை. அவசர மருத்துவ உதவிக்கு பல்லடம், பொள்ளாச்சி, சூலுார் அல்லது கோவைக்கு செல்ல வேண்டியுள்ளது. பிரசவ வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகள், விபத்தில் சிக்கும் ஏழைத் தொழிலாளிகள், அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.108 ஆம்புலன்ஸ் தேவை என்றால், 14 கி.மீ., துாரத்தில் உள்ள பல்லடம், 20 கி.மீ., ல் உள்ள சூலுாரில் இருந்து தான், செல்ல வேண்டும்.சுல்தான்பேட்டை பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில், அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லை. 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தாலும், குறித்த நேரத்தில் வந்து சேர்வதில்லை. வேறுவழியின்றி, தனியார் ஆம்புலன்ஸ்கள், வாடகை கார்களை அழைக்கிறோம். இதனால், கூடுதல் செலவு ஆகிறது. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வரும் எங்களுக்கு, இந்தச் செலவு பெரும் சுமையாக அமைகிறது. சுல்தான்பேட்டையில், அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக்க மக்கள் பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் பொது மேலாளர் செல்வ முத்துக்குமார் கூறுகையில்,''வரும் மார்ச் மாதத்தில், கோவை மாவட்டத்துக்கு புதிய, 108 ஆம்புலன்ஸ்கள் வர உள்ளன. சுல்தான்பேட்டை மக்களின் கோரிக்கையை, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று, அப்பகுதியை மையமாகக் கொண்டு,108 ஆம்புலன்ஸை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X