பொது செய்தி

தமிழ்நாடு

தேயிலை வர்த்தக மையத்தில் ரூ 2.57 கோடிக்கு விற்பனை

Added : பிப் 14, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:கோவையில் உள்ள தேயிலை ஏல வர்த்தக மையத்தில், 2 கோடியே, 57 லட்சம் ரூபாய்க்கு, இலை ரக தேயிலை மற்றும் தேயிலை துாள் விற்பனையானது.கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வர்த்தக மையத்தில் வாரந்தோறும் தேயிலை ஏலம் நடக்கும். இதில், வெளிநாடு மற்றும் உள்நாடு ஏலதாரர்கள் பங்கேற்பர். இந்த வாரம் நடந்த தேயிலைத்துாள் ஏலத்திற்கு, 2 லட்சத்து, 67 ஆயிரத்து, 65 கிலோ தேயிலை துாள் விற்பனைக்கு வந்தது. அதில் ஒரு லட்சத்து, 78 ஆயிரத்து, 43 கிலோ தேயிலை துாள் ஏலம் போனது. இது 67 சதவீதமாகும். ஏலத்தில், 42 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேயிலை துாள் சராசரியாக, 94 ரூபாய், 54 காசுக்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் நடந்த ஏலத்தை காட்டிலும், தேயிலை துாள் விலை கிலோவுக்கு, 22 காசுகள் அதிகரித்து காணப்பட்டது.இதே போல, இலை ரக தேயிலை ஏலத்தில் ஒரு லட்சத்து, 74 ஆயிரத்து, 236 கிலோ தேயிலை விற்பனைக்கு வந்தது. இதில், 99 ஆயிரத்து, 112 கிலோ தேயிலை ஏலம் போனது. இது, 57 சதவீதமாகும். இதில், 24 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ, 89 ரூபாய், 53 காசுக்கு விற்பனையானது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்த இலை ரக தேயிலை விலை, இந்த வாரம் கிலோவுக்கு, 2 ரூபாய், 21 காசு உயர்ந்து காணப்பட்டது. இந்த வார ஏலத்தில், 2 கோடியே, 57 லட்சத்து, 5 ஆயிரத்து, 682 ரூபாய்க்கு தேயிலை துாள் மற்றும் இலை ரக தேயிலை விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X