சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டட தொழிலாளியை பாட்டிலால் குத்திய பெண்

Added : பிப் 14, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:காரமடையை சேர்ந்த, கட்டட தொழிலாளியை, பாட்டிலால் குத்திய பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன், 48 கட்டடத் தொழிலாளி. காரமடை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் தீபா, 42. கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். கட்டட கட்டுமான பணிகளில் ஈடுபட்ட ராஜனுக்கும், தீபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜன், தீபா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தீபா, வேறு ஒரு வாலிபருடன் பேசிக் கொண்டிருப்பதைப் பர்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் தீபாவுக்கும், ராஜனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த தீபா, பாட்டிலால் ராஜனை குத்தியுள்ளார். படுகாயமடைந்த ராஜன், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து, காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X