காட்டுப்பன்றி, மயில் தொல்லை: முகாமில் விவசாயிகள் புகார்

Added : பிப் 14, 2020
Advertisement

அன்னுார்:அன்னுாரில் நடந்த விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பில், விவசாயிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் வேளாண்துறை சார்பில், அன்னுார் வேளாண் விரிவாக்க மையத்தில், வட்டார அளவிலான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி முன்னிலை வகித்தார்.வேளாண் துணை இயக்குனர் பெருமாள்சாமி பேசுகையில், ''விவசாயிகள், தோட்டத்து மண்ணை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம், எந்த பூச்சி மருந்து தெளிக்கலாம். என்ன சத்து இருக்கிறது; எது பற்றாக்குறை, என தெரிந்து, அதற்கேற்ப உரம் இடலாம்,'' என்றார்.காரமடை, இந்திய வேளாண் அறிவியல் நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி குமாரவடிவேல் பேசுகையில்,'' நம் பகுதியில், பல தோட்டங்களில் பொட்டாஷ் சத்து குறைவாக உள்ளது. குறிப்பாக இயற்கை முறை விவசாயம் செய்பவர்கள் தோட்டங்களில், பொட்டாஷ் அறவே இருப்பதில்லை.இதை ஈடுசெய்ய, இயற்கை உரமான சல்பேட்டா பொட்டாஷ், ஜெர்மன் பேட்டன் காலி, பொட்டாஷ் பாக்டீரியா ஆகியவற்றை பயன்படுத்தலாம்,''என்றார்.தொழில்நுட்ப வல்லுனர் மகா சகாதேவன், துணை இயக்குனர் கைலாஷ், வேளாண் பொறியாளர் ஹரிஹரன் உள்பட பலர் பேசினர்.கூட்டத்தில், எல்லப்பாளையம் விவசாயிகள்,' எங்கள் பகுதியில் மயில்களும், காட்டுப் பன்றிகளும் பயிர்களை அழிக்கின்றன. தக்காளி, மிளகாய், உள்பட எந்த பயிரையும் மயில்கள் விட்டுவைப்பதில்லை. பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிலர், விவசாய நிலங்களை தரிசாக விட்டு விட்டனர்,' என்று சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X