பொது செய்தி

தமிழ்நாடு

பத்தாண்டு தொடர் இழுபறிக்கு வந்தது தீர்வு

Added : பிப் 14, 2020
Advertisement
 பத்தாண்டு தொடர் இழுபறிக்கு வந்தது தீர்வு

அன்னுார்:அன்னுார் தாலுகாவில், மின்மயானம் இல்லை. எனவே அன்னுார் தெற்கு பகுதி மக்கள் இறுதி சடங்குகளை செய்ய சரவணம்பட்டி மின் மயானத்திற்கும், மேற்குப் பகுதி மக்கள் பெரியநாயக்கன்பாளையத்துக்கும், வடக்கு பகுதி மக்கள், ஈரோடு மாவட்டம் புளியம்பட்டிக்கும் செல்கின்றனர்.அன்னுாரில் நவீன மின்மயானம் அமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரி வந்தனர். இதற்காக நமக்கு நாமே திட்டத்தில், லயன்ஸ் கிளப் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட நிர்வாகத்திடம், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது.இதையடுத்து, அரசாங்கம், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு மக்கள் எதிர்ப்பால், ஏற்கனவே மயானம் உள்ள இடத்தில், மின் மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் பொதுப்பணித்துறை அதற்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் தர நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் இப்பணிகள் ஆறு ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது. கடந்த நவம்பரில் பொதுப்பணித்துறை ஆட்சேபனை இல்லை எனும் சான்றிதழ் வழங்கியது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்தது.இதற்கான பூமி பூஜை, மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது. இதையடுத்து ஏற்கனவே மின்மயானம் செயல்பட்டுவரும் வளாகத்தில், மரங்களை வெட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கபட்டது.அதற்கான அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், இரண்டு மாதங்களாக பணி முடங்கியது. ஒருவழியாக அனுமதி கிடைத்து, கடந்த இரு நாட்களாக அன்னுார், மேட்டுப்பாளையம் ரோட்டில், குளத்தில், ஏற்கனவே மயானம் உள்ள ஒன்றரை ஏக்கர் இடத்தில் உள்ள கொட்டகைகள், தகனமேடை, குடிநீர் மேடை ஆகியவற்றை அகற்றும் பணி இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.எனவே, தற்காலிகமாக மயானத்தில், இறுதிச் சடங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மயானத்தின் மேற்கே உள்ள குளத்தில், இறுதிச் சடங்குகளை செய்ய, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதே வேகத்தில் ஒரு ஆண்டுக்குள் மின் மயானத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X