பொது செய்தி

தமிழ்நாடு

மின் மோட்டாரால் உறிஞ்சி நீர் எடுப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்;எம்.கவுண்டம்பாளையத்தில், மின் மோட்டார் வைத்து, குடிநீரை சிலர் உறிஞ்சுகின்றனர். இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.சிறுமுகை அடுத்த முடுதுறை ஊராட்சியில், எம்.கவுண்டம்பாளையம் உள்பட, 17 குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு, ஒன்பது ஊராட்சிகளின் கூட்டு குடிநீர் திட்டத்தில், கோவில் மேடு பகுதியிலிருந்து, குடிநீர் வழங்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.எம்.கவுண்டம்பாளையம் பகுதியில், சுமார் 100 வீடுகள் உள்ளன. இதில் 60 க்கும் மேற்பட்ட வீடுகளில், குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. இது அல்லாது, 7 பொது குழாய்கள் உள்ளன. இந்த பொது குழாய்களில் தான், அதிகமான மக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர்.ஊரின் அருகே உள்ள சில விவசாயிகள், தங்கள் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். தண்ணீர் திறந்து விடும் போது, இவர்கள் மின்மோட்டாரை பயன்படுத்தி, தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.கவுண்டம்பாளையம் பொதுமக்கள் கூறியதாவது: கடந்த, 4 மாதங்களுக்கு முன்பு வரை, வீடுகளிலும், பொது குடிநீர் குழாய்களிலும் போதிய அளவு தண்ணீர் கிடைத்தது. தற்போது, சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி, குடிநீரை உறிஞ்சுவதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஐந்து குடங்கள் தண்ணீர் கூட கிடைப்பதில்லை. அவர்கள் அந்தத் தண்ணீர் மூலம், பயிர் செய்கின்றனர். போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், புகார் கூறியுள்ளோம். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.ஊராட்சி தலைவர் ராஜா கூறியதாவது: எம்.கவுண்டம்பாளையத்தில் மின் மோட்டாரை வைத்து, தண்ணீர் உறிஞ்சுவது புகார்கள் வந்துள்ளன. இது சம்பந்தமாக பி.டி.ஓ., விடம் தகவல் தெரிவித்து, ஊராட்சி பணியாளர்களை வைத்து, ஆய்வு செய்யப்படும். அப்போது மின் மோட்டார்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்வாறு தலைவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X