சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மே 17' இயக்கத்தினர் மீது போலீஸ் வழக்கு

Added : பிப் 14, 2020
Advertisement

மயிலாப்பூர்:பிராமணர்களுக்கும், மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே, கலகம் ஏற்படுத்தும் வகையில், வேத இதிகாசங்களை பற்றி இழிவாக பேசிய, 'மே 17' இயக்கத்தினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மயிலாப்பூர், மாங்கொல்லையில், 2018ம் ஆண்டு, மே 17 இயக்கத்தினர் சார்பில், போலீசாரின் அனுமதியுடன், பொதுக்கூட்டம் நடந்தது.அந்த கூட்டத்தில், பிராமணர்களுக்கும், மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே, கலகம் ஏற்படுத்தும் வகையில், வேத இதிகாசங்களை பற்றி, மிக இழிவாக, அந்த இயக்கத்தினர் பேசினர்.இது தொடர்பாக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அருள் முருகன், லினோகுமார், பிரவீன் குமார் ஆகிய நான்கு பேர் மீது, மயிலாப்பூர் போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X