பொது செய்தி

தமிழ்நாடு

'நீங்கள் என்ன மகாராணியா?' கர்ப்பிணியரை கதற விடும் டாக்டர்கள்

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 'நீங்கள் என்ன மகாராணியா?' கர்ப்பிணியரை கதற விடும் டாக்டர்கள்

சென்னை:எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கர்ப்பிணியருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், டாக்டர்கள் வெகுநேரம் காக்க வைப்பதாகவும், மொபைல் போனில் மூழ்கிக் கிடப்பதாகவும், கர்ப்பிணியர் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், சுக மற்றும் அறுவை சிகிச்சை பிரசவங்களுக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான கர்ப்பிணியர் வருகின்றனர்.இந்த மருத்துவமனையில், பிரசவிக்கப்படும் குழந்தைகளுக்கு, 1,000 ரூபாய் வரை, பணியாளர்கள் லஞ்சம் பெறுகின்றனர்.

மேலும், 'லிப்ட் ஆப்பரேட்டர்' முதல், 'வீல் சேர்' தள்ளுபவர் வரை, கர்ப்பணியர் மற்றும் பிரசவித்த பெண்களிடம், 50 முதல், 100 ரூபாய் வரை கட்டாயமாக வசூலித்து வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில், தற்போது டாக்டர்கள் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தி, கர்ப்பிணியரை அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத கர்ப்பிணி ஒருவர் கூறியதாவது:தைராய்டு பரிசோதனைக்காக, நேற்று எழும்பூர் மருத்துவமனை வந்தேன். காலை, 7:00 முதல் காத்திருந்தேன்; டாக்டர்கள் வரவே இல்லை. பின், வெகு நேரம் கழித்து வந்த டாக்டர் ஒருவர், 'எனக்கு உதவி டாக்டர்கள் யாருமில்லை. நான், யாருக்கும் சிகிச்சை அளிக்க மாட்டேன்' என, அவரது அறையை பூட்டிக் கொண்டார். சிலர், அவரது அறையை தட்டியபோது, 'நீங்கள் என்ன மகாராணியா? காத்திருங்கள் நான் வருவேன்' என்றார்.

வெகுநேரம் காத்திருந்த போது, காலை, 11:30 மணிக்கு வந்த அவர், ஒரு சிலருக்கு மட்டும் சிகிச்சை அளித்து விட்டு, 'மற்றவர்கள் நாளை வாருங்கள்' என, பணியை முடித்துக் கொண்டார். இதேபோல், இந்த மருத்துவமனையில், எந்த பிரிவுக்கு சென்றாலும், டாக்டர்கள் மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், கர்ப்பிணியர் அவதிக்குள்ளாகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் டாக்டர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-202018:46:42 IST Report Abuse
ருத்ரா இந்த டாக்டர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்த தேவர்களா. கர்ப்பிணிக்கு வலி வந்து பிறந்தவர்கள் தானே.
Rate this:
Cancel
14-பிப்-202015:13:16 IST Report Abuse
Prasanna Krishnan They must be dismissed and encountered.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X