சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை உறவுக்கு அழைத்தவர் கைது

Added : பிப் 14, 2020
Advertisement

அயனாவரம்:வீட்டில், கைக்குழந்தையுடன் தனியாக இருந்த பெண்ணை, உடலுறவுக்கு அழைத்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.

அயனாவரத்தைச் சேர்ந்த, 27 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு, அயனாவரம் காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 'என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலாஜி, 22, என்பவர், வீட்டில் நான் தனியாக இருந்தபோது, என்னை உடலுறவுக்கு அழைத்தார். நான் அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள, உடனடியாக கதவை பூட்டிக் கொண்டேன். பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், பாலாஜி அப்பெண்ணை உடலுறவுக்கு அழைத்தது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X