கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணி: அன்னூரில் விரைவாக முடிக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணி: அன்னூரில் விரைவாக முடிக்க வலியுறுத்தல்

Added : பிப் 14, 2020
Share
 கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணி: அன்னூரில் விரைவாக முடிக்க வலியுறுத்தல்

அன்னுார்:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் ஆகிய மூன்று பேரூராட்சிகள், சூலுார் விமான நிலைய குடியிருப்பு மற்றும் சூலுார் ஒன்றியத்தில் சில குடியிருப்புகளுக்கு, 241 கோடி ரூபாயில், பவானி ஆற்று நீர் சப்ளை செய்யும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், கடந்த 2018ல் துவங்கியது.
இதற்கு, சிறுமுகை அருகே பவானி ஆற்றில் நீர் எடுக்கப்பட்டு, அன்னுார் வரும் வழியில், சுமைதாங்கி என்ற இடத்தில், 13 லட்சம் லிட்டர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து நீரேற்று நிலையம் மூலம் அன்னுார், மோப்பிரிபாளையம் மற்றும் அவிநாசிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.இதற்கான குழாய்கள் பதிக்கும் பணி சுமைதாங்கியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் துவங்கி, அன்னுார் வரை நடக்கிறது. இதில், அன்னுார் நகரில் குழாய்கள் பதிக்கும் பணி, கடந்த இரு நாட்களாக, வேகமாக நடக்கிறது. கடை வீதியை ஒட்டியுள்ள ஓதிமலை ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் நுழையும் இடத்திலும், குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அன்னுார், கடைவீதியில், குழாய் பதிக்கும் பணியை, இரவு நேரத்தில் விரைவாக முடித்தால் மட்டுமே, அன்னுார் நகரில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்.எனவே, கடைவீதியில் குழாய் பதிக்கும் பணியை வேகமாக முடிக்க வேண்டு மென, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்த குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அன்னுார் பேரூராட்சிக்கு தினமும், 30 லட்சம் லிட்டர் நீர் கிடைக்கும். தற்போது, எட்டு நாட்களுக்கு ஒரு முறை சப்ளை ஆகிறது. இனி மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கும் என்பதால், அன்னுார் மக்கள், ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X