அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்

Added : பிப் 14, 2020
Advertisement
 தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்

கடலுார்:தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வடலுாரில் நடந்தது.மாவட்ட செயலர் பன்னீ்ர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
எம்.பி., ரமேஷ், எம்.எல்.ஏ.,க்கள் சரவணன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திகேயன் வரவேற்றார். தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கி பேசினார்.கூட்டத்தில், எம்.ஆர்.கே. பொறியியல் கல்லுாரி சேர்மன் கதிரவன், மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், வடலுார் நகர இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், நகர செயலர்கள் ராஜா, செந்தில்குமார், ஒன்றிய செயலர்கள் சிவக்குமார், மாமல்லன், முத்துப் பெருமாள், ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினுக்கு, மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வெள்ளி வாள் வழங்கி பேசுகையில், 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மேயராக பதவியில் இருந்த போது, சென்னையை சிங்கார சென்னையாக மாற்றினார். உள்ளாட்சியில் அவர் நல்லாட்சி தந்தவர். தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க.,வில் மறுமலர்ச்சியை உருவாக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வராக பதவியேற்கும் முன்பாகவே உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.தி.மு.க., வில் பதவியை எதிர்பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சியில் பொறுப்புக்கு வந்தவுடன் எம்.பி., - எம்.எல்.ஏ., வாக வேண்டும் என்று கனவு காண கூடாது. உழைப்பவர்களுக்கு பலன் கிடைக்கும். இளைஞரணி நிர்வாகிகள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X