சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : பிப் 14, 2020
Advertisement

வழிப்பறி கும்பலுக்கு வலை

புழல்: கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சரத்குமார், 29. இவர், மாதவரம், பால்பண்ணை அருகே, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மதுரவாயலில் இருந்து, டூ - வீலரில் வீட்டிற்கு சென்றபோது, ஐந்து பேர் கும்பல், புழல், ரெட்டேரி பாலம் அருகே அவரை வழிமறித்து, கத்தியால் குத்தி, 20 ஆயிரம் ரூபாய் பறித்து தப்பியது. காயமடைந்த சரத்குமார், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

காவல் நிலையத்தில் திருட்டு

பூக்கடை: பூக்கடை, போக்குவரத்து பிரிவில், தலைமை காவலராக பணிபுரிபவர் முத்துசாமி, 46. இவர் பூக்கடை காவல் நிலையத்தின் மேல்மாடியில் உள்ள ஓய்வு அறையில், முக்கிய ஆவணங்கள், உடைமைகள் அடங்கிய, இரும்பு பெட்டி ஒன்றை வைத்திருந்தார். சமீபத்தில் அது மாயமானது. பூக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

அ.தி.மு.க., பிரமுகருக்கு கத்திக்குத்து

புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப் பேட்டை, சிவன் நகரை சேர்ந்தவர் நிர்மல்குமார், 29; அ.தி.மு.க., ஆர்.கே.நகர் மாணவரணி பகுதி செயலர். இவர் நேற்று, உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, தண்டையார்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வழியாக வீடு திரும்பிய போது, மர்ம நபர்கள் மூவர், கத்தியால் குத்தி தப்பினர். இதில் படுகாயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ், சதீஷ், கமர் ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. தலைமறைவான மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

3 கிலோ கஞ்சா பறிமுதல்

புளியந்தோப்பு: புளியந்தோப்பு பகுதியில், கஞ்சா விற்ற கன்னிகாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன், 22, ஜே.ஜே.நகரைச் சேர்ந்த பரத்குமார், 27, ஆகியோரை நேற்று கைது செய்த போலீசார், 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மொபைல் திருடியோர் சிக்கினர்

திருவான்மியூர்: திருவான்மியூர், காமராஜர் நகரில்சண்முகானந்தம், 45, உள்ளிட்ட நான்கு பேர் வீடுகள், அடுத்தடுத்து உள்ளன. கடந்த, 11ம் தேதி இரவு,நான்கு வீடுகளில் இருந்து, ஐந்து மொபைல் போன்கள் திருடு போயின. விசாரித்த திருவான்மியூர் போலீசார், அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்த பிரபு, 25, மற்றும் 17 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர்.

பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

சென்னை: ஓட்டேரி, எஸ்.எஸ்.புரம், பி - பிளாக்கைச் சேர்ந்தவர் ரங்கநாயகி, 59; வீட்டு வேலை செய்பவர். இவர், 10ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வேலை முடித்துவிட்டு, தடம் எண்: 29சி பஸ்சில் ஏறி, ஓட்டேரி, சுடுகாடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது, அவரது, இரண்டேகால் சவரன் நகை மாயமானது தெரிய வந்தது. இது குறித்து, ரங்கநாயகி நேற்று முன்தினம் இரவு அளித்த புகாரின் அடிப்படையில், தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

கழிப்பறைகளை காணோம்!

ஆர்.கே.நகர்: ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் மாநில தலைவர் செல்வம், ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில், நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த, 1992ல், கொருக்குப்பேட்டை துவங்கப்பட்ட போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால், பொதுமக்களுக்கு வீடும், 78 பொது கழிப்பறைகள் மற்றும் 76 கழிவு நீர் தொட்டிகளை வழங்கியது.

மாநகராட்சி பராமரிப்பில் இருந்த பொது கழிப்பறைகளை, அரசியல்வாதிகளும், சமூக விரோதிகளும் ஆக்கிரமித்துள்ளனர். பல கழிப்பறைகளை இடித்து, பல லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டனர். எனவே, காணாமல் போன பொது கழிப்பறைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை கண்டுபிடித்து தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X