பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

Added : பிப் 14, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே, வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில், சமூக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.இக்கல்லுாரி சார்பில், 'வளமிகு இந்தியாவிற்கு நலமிகு இளைஞர்கள்' என்ற தலைப்பில் நாட்டுநலப்பணித் திட்டத்தின், ஒருவார கால சிறப்பு முகாம், வடமதுரையில் நடக்கிறது. வடமதுரை தொடக்கப்பள்ளியில் நடந்த இம்முகாமின் தொடக்க விழாவுக்கு, குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி தலைமை வகித்தார். விழிப்புணர்வுஊர்வலத்துக்கு போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் உதயகுமார், நடராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். நாட்டுநலப்பணித் திட்டத்தலைவர் கேசவசாமி தலைமை வகித்தார். கோவை மாவட்ட போக்குவரத்து கண்காணிப்பாளர் விநாயகமூர்த்தி சிறப்புவிருந்தினராக பங்கேற்று, ஊர்வலத்தை தொடக்கி வைத்தார். ஊர்வலத்தில் குழந்தைத் தொழில் ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு அட்டைகளை, மாணவர்கள் ஏந்தி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X