பொது செய்தி

தமிழ்நாடு

பயனீர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு 

Added : பிப் 14, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே, ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை, அறிவியல் கல்லுாரியில் தகவல் தொழில்நுட்ப தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.கல்லுாரியின் கணினி அறிவியல் துறை, கணினி பயன்பாட்டில் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியன இணைந்து ஜேவியான், 2020 என்ற தலைப்பில் இக்கருத்தரங்கை நடத்தியது.நிகழ்ச்சியை கல்லுாரி முதல்வர் மகேந்திரன் தொடக்கி வைத்தார். இதில், ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தல், குறும்படங்கள் தயாரிப்பு, நிரல் பிழை திருத்தம், போஸ்டர் டிசைன்ஸ், பென்சில் டிராயிங் உள்ளிட்ட போட்டிகளில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை, அறிவியல் கல்லுாரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.நிறைவுவிழாவில், கல்லுாரி துணை முதல்வர் ராஜப்பன், ஜி.ஆர்.ஜி., கல்வியியல் கல்லுாரி ஒய்வு பெற்ற பேராசிரியர் பீமன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X