பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவது திடீர் நிறுத்தம்

Added : பிப் 14, 2020
Advertisement

கடலுார்:கடலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடலுார், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய தாலுகாக்களில் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடலுார், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய தாலுகாக்களில் தேவைக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆட்டோக்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.ஆட்டோக்காரர்கள் மீது அதிகளவில் புகார்கள் வருவதால் வரும் 31.12.2020 வரை ஆட்டோக்களுக்கு தற்காலிகமாக அனுமதி சீட்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஏற்றுவதாலும், பஸ்களின் முன் நின்று ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதாலும், அதிக வேகமாகவும் அபாயகரமாகவும் ஓட்டுவதாலும், பள்ளி குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் ஏற்றி செல்வதும் தெரிய வருவதால் ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோக்களின் அனுமதி சீட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X