கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.92 கோடி சொத்து வரி நோட்டீசுக்கு ஐகோர்ட் தடை

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை:சொத்து வரியாக, 1.92 கோடி ரூபாய் செலுத்தும்படி, விஜயா மருத்துவமனைக்கு அனுப்பிய நோட்டீசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை, வடபழநியில் உள்ள, விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலரான பாரதி ரெட்டி தாக்கல் செய்த மனு:வடபழநியில் எங்கள் மருத்துவமனை மற்றும் அறக்கட்டளை உள்ளது. இந்த வளாகத்தில், ஆறு நிறுவனங்கள் உள்ளன. ஆறு மாதங்களுக்கான சொத்து வரியாக, 32 லட்சம் ரூபாய் செலுத்தி வந்தோம். தற்போது, சொத்து வரி மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக கூறி, மாநகராட்சி உதவி வருவாய் அதிகாரி, நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் விசாரணை நடக்கவில்லை. கூடுதலாக, 9..89 லட்சம் ரூபாய் செலுத்தினோம். இந்நிலையில், இறுதி மதிப்பீடு செய்யாமல், 1..92கோடி ரூபாய் சொத்து வரி செலுத்தும்படி, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனு மீது, உத்தரவு பிறப்பிக்கும்படி பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டன. மாநகராட்சி ஆணையருக்கும், கடிதம் அனுப்பப்பட்டது. எந்த பதிலும் இல்லை.தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியை செலுத்தும்படி, வரி வசூலிப்பாளர் நேரில் வந்து நோட்டீஸ் அளித்துள்ளார். இதற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை, மாநகராட்சி தரப்பில் அனுப்பிய நோட்டீசுக்கு, நீதிபதி தடை விதித்தார். விசாரணையை, மார்ச் 12ம் தேதிக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X