பொது செய்தி

தமிழ்நாடு

'மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறடூந்த மாநிலம் தமிழகம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 'மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறடூந்த மாநிலம்  தமிழகம்

சென்னை

''மாற்றுத் திறனாளிகள் நலனில் சிறப்பாக செயல்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசினார்.

'அமர் சேவா சங்கம்' சார்பில், மாற்றுத் திறனாளி குழந்தைகளை, முன்கூட்டியே அறிதல் பற்றிய, சர்வதேச கருத்தரங்க துவக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை துவக்கி வைத்து, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 1993ம் ஆண்டிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு துறையை ஏற்படுத்தி, அதற்கான கொள்கை வகுத்தார். அதன் பலனாக, 2013 - 14ம் காலகட்டத்தில், தமிழகம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த மாநிலம் என்ற தேசிய விருதை பெற்றது.தமிழக அரசு, இந்தாண்டு, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, 572 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

மாற்றுத்திறனாளியை முன்கூட்டியே அறியும் மையம் என்பது, 6 வயதுக்குள் குழந்தையை மாற்றுத் திறனாளி எனக் கண்டுபிடித்து விட்டால், பிசியோதெரபி உள்ளிட்ட பயிற்சி அளித்து, பள்ளிக்கு அனுப்பி விடலாம்.அமர் சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், குழந்தை பிறந்த, 3 வயதுக்குள்ளேயே, இயலாமையை கண்டறிந்து விடலாம் என்பதை, அங்கன்வாடி, கிராமப்புற சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு, பயிற்சியளித்து வருகிறார்.

59 ஆயிரத்து, 459 அங்கன்வாடி மையங்களில் உள்ள, 2,775 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டது.இதன் விளைவாக, திருநெல்வேலி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 15 ஆயிரம் குழந்தைகள் சோதிக்கப்பட்டதில், 172 குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு சமமான அந்தஸ்தை வழங்குவதில், தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் விஜயராஜ் குமார், அமர்சேவா சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X