கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை :இருவருக்கு ஆயுள்

Added : பிப் 14, 2020
Advertisement

பூந்தமல்லி:ஆவடியில், கொடுக்கல் - வாங்கல் தகராறில், வாலிபரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிஉள்ளது.

ஆவடி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு, 27, அவரது நண்பர் லட்சுமிபதி, 26, இருவரும், பழைய கார்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தனர்.ஆவடி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மஸ்தான், 32, என்பவரும், அவர்களுடன் சேர்ந்து, தொழில் செய்து வந்தார். இந்நிலையில், ராஜகுருவிடமிருந்து, மஸ்தான் வாங்கிய பணத்திற்காக, மஸ்தானின் காரை, ராஜகுரு எடுத்து சென்றார்.

இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 2015ல், மஸ்தானுக்கு போன் செய்த ராஜகுரு, கார் குறித்து பேச வேண்டும் என அழைத்தார். வீட்டிற்கு சென்ற அவரை, ராஜகுருவும், லட்சுமிபதியும் சேர்ந்து, சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தனர். ஆவடி போலீசார், ராஜகுரு, லட்சுமிபதியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் - 3ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா, நேற்று தீர்ப்பு வழங்கினார்.குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா, 7,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்ட தவறினால், மேலும், ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X