தமிழ்நாடு

இடிப்பு! நல்ல நிலையில் உள்ள கால்வாய்கள்...கடலூர் நகரில் விரயமாகும் அரசு நிதி

Added : பிப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இடிப்பு!  நல்ல நிலையில் உள்ள கால்வாய்கள்...கடலூர் நகரில் விரயமாகும் அரசு நிதி

கடலுார்:கடலுார் நகரில் மழைநீர் வடிகால் அமைக்க ஏற்கனவே கட்டி முடித்து நல்ல நிலையில் உள்ள வாய்க்கால்களை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுவதால் அரசு நிதி விரயமாகிறது.
கடலுார் இயற்கை சீற்றங்களில் பாதிக்கிற மாவட்டமாக உள்ளதால் மின்சார கேபிள்கள், மழை நீர் வடிகால் வாய்க்கால், ஆறுகளின் கரைகள் பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடலுாரில் பெரு வெள்ளத்திற்கு பின் 2016ம் ஆண்டு நகரப் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு 42 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது மழைநீர் வடிகால் வாய்க்கால் முழுவீச்சில் நடந்து வருகிறது. நெல்லிக்குப்பம் சாலை, குண்டுசாலை, ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி சாலை, கலெக்டர் அலுவலக சாலை போன்ற இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே இந்த சாலைகளில் பெரிய அளவில் அகலமான வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. நல்ல நிலையில் இருந்த வாய்க்காலை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடலுார் நகராட்சியில் சொத்து வரி வசூல் இல்லை. வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது. இதனால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை என்கிற கருத்து நிலவி வருகிறது.இந்த நிலையில் கடலுார் நகராட்சிக்குள் பல புதிய நகர்கள் உருவாகியுள்ளன. இந்த நகர்களில் இருந்து தண்ணீர் வெளியேற வாய்க்கால் கட்டப்படாமல் உள்ளது.தலைமை தபால் நிலையம் அருகே கட்டப்பட்டிருந்த வாய்க்கால் மழைநீர் வடிய வாட்டம் இல்லாமல் கட்டப்பட்டதாகவும், தரமானதாக இல்லையெனவும் நகராட்சி தரப்பில் சொல்லப்படும் காரணங்களாகும்
.அண்மையில் பெய்த திடீர் மழையின்போது நேதாஜி தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன. இது போன்ற இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.மக்களுக்கு அதிகளவில் பயன்படக்கூடிய இடங்களில் வடிவாய்க்கால்கள் கட்டப்படவில்லை. பிரச்னையில்லாமல் சுலபமாக கட்டும் இடங்களில் மட்டுமே வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அரசுப் பணம் தேவையில்லாமல் விரமயமாகும் நிலை உள்ளது
.இந்த கால்வாய் பணியை கவனித்து வரும் உதவி பொறியாளர் ஜெயப்பிரகாஷ் கூறியதாவது;ஏற்கனவே கட்டப்பட்ட கால்வாய்களில் தண்ணீர் வடியவில்லை. வாட்டம் பார்த்து கட்டாததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ஒன்னரை ஜல்லியினால் கட்டப்பட்ட சுவர் என்பதால் அந்தளவுக்கு உறுதியானது இல்லை. தற்போது கட்டப்படும் கால்வாய் கம்பியால் கட்டப்படுகிறது. மேலும் தண்ணீர் வடிவதற்காக வாட்டம் பார்த்து அமைக்கப் படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
14-பிப்-202005:59:51 IST Report Abuse
Mani . V "இதென்னய்யா உங்க கூட ஒரே ரோதனையா போச்சு அப்புறம் எப்படித்தான்யா நாங்க கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்கிறது? போங்க சார் இந்த பிரச்சினையை விட்டு விட்டு, ஒரு நடிகரை எம்ஜியார் அடிக்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது. அதை போய் பாருங்க சார். தயவுசெய்து எங்களை கொள்ளையடிக்க விடுங்க சார்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X