பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் இருதய நோய் சிகிச்சை முகாம்

Added : பிப் 14, 2020
Advertisement

புதுச்சேரி:மியாட் மருத்துவமனை சார்பில், கடலுாரில் வரும் 16ம் தேதி, இருதய மற்றும் நீரிழிவு நோய் ஆலோசனை சிறப்பு முகாம் நடக்கிறது.
சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல், நீரிழிவு மற்றும் ஹார்மோன் பிரச்னைகள் தொடர்பான மருத்துவ ஆலோசனை முகாம், கடலுாரில் வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.மஞ்சக்குப்பம் ஏ.எல்.சி., வளாகத்தில் உள்ள ஆற்காட் மருத்துவமனையில், காலை 8:00 முதல் பகல் 1:00 மணி வரை முகாம் நடக்கிறது. மியாட் மருத்துவமனையின் இருதய நோய் சிகிச்சை நிபுணர் ஜெய்ஷங்கர், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜித் கே.செரியன், நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர் விஜய்பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று, ஆலோசனை வழங்குகின்றனர்.முகாமில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்ய வேண்டும். ஆலோசனை கட்டணம் ரூ. 200. முன்பதிவு செய்ய, 04142-230759, 7824060141 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.முகாமில் பங்கேற்போர், முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X