சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை

Added : பிப் 14, 2020
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்:சேத்தியாதோப்பு அருகே திருமணமான 10 மாதத்தில் இறந்த இளம் பெண் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தினார்.
சேத்தியாதோப்பு அடுத்த சென்னிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன், 28; இவருக்கும் அகர ஆலம்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சரண்யா, 26, என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இளவரசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னிநத்தத்தில் தனது கணவர் வீட்டில் உள்ள அறைக்கு துாங்க சென்றார். காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்து, அருகில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சரண்யா அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியதோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருமணமாகி 10 மாதங்களே ஆவதால், சிதம்பரம் ஆர்.டி.ஓ., விசுமகாஜன் நேரில் விசாரணை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X