பொது செய்தி

தமிழ்நாடு

வீராங்கால் கால்வாய் சீரமைக்க திட்டம் என்ன? மாநகராட்சி அறிக்கை அளிக்க உத்தரவு

Added : பிப் 14, 2020
Share
Advertisement

சென்னை:வேளச்சேரி, வீராங்கால் கால்வாய் மறுசீரமைப்பதற்கான திட்ட அறிக்கையை உருவாக்க குழு அமைத்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

வேளச்சேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் வடிகால் நீர், வேளச்சேரி விரைவு சாலையை ஓட்டியுள்ள, வீராங்கால் கால்வாய் வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், உபரி நீர் வெளியேறவில்லை. விரைவு சாலையை ஒட்டியுள்ள, வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கால்வாயில் விடப்படுகிறது. இதனால், கால்வாயில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இது குறித்து, நம் நாளிதழில், 10ம் தேதி செய்தி வெளியானது. செய்தியை அடிப்படையாக கொண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சென்னை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொண்ட குழு அமைக்கப் படுகிறது. இந்த குழுவினர், கழிவு நீர் கலப்பதற்கான காரணம் என்ன, இதற்கு யார் பொறுப்பு என, கண்டறிய வேண்டும்.

மேலும், கால்வாயை சீரமைப்பதற்கான திட்டத்துடன், ஒரு மாதத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணை, மார்ச், 27க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X