2 கிராம் தங்க நாணயம் பரிசு ஆவடிமாநகராட்சி அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 கிராம் தங்க நாணயம் பரிசு ஆவடிமாநகராட்சி அதிரடி

Added : பிப் 14, 2020
Share
ஆவடி:'ஆவடியை துாய்மையாக்க நடத்தப்படும், விழிப்புணர்வு கோலப்போட்டியில், வெற்றி பெறும் நபருக்கு, 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.ஆவடி, விவேகானந்தா மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில், மாநகராட்சி சார்பில், நாளை விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்படுகிறது.இதில், 'வீட்டு குப்பையை உரமாக்குவோம்; மாடித் தோட்டம் அமைப்போம்; மரம்

ஆவடி:'ஆவடியை துாய்மையாக்க நடத்தப்படும், விழிப்புணர்வு கோலப்போட்டியில், வெற்றி பெறும் நபருக்கு, 2 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்' என, மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆவடி, விவேகானந்தா மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில், மாநகராட்சி சார்பில், நாளை விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்படுகிறது.இதில், 'வீட்டு குப்பையை உரமாக்குவோம்; மாடித் தோட்டம் அமைப்போம்; மரம் வளர்ப்போம்; மழை நீரை சேகரிப்போம்; நம் நகரத்தை துாய்மையாக மாற்றுவோம்' என, ஐந்து தலைப்புகளில், கோலப்போட்டி நடத்தப்பட உள்ளது.

முதல் பரிசு வெல்வோருக்கு, 2 கிராம் தங்க நாணயம், இரண்டாவது பரிசாக, 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என, ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.இதனால், போட்டியில் பங்கேற்க, பெண்கள் ஆர்வமுடன் தங்கள் பெயர்களை, நேற்று பதிவு செய்தனர். நேற்று காலை மட்டுமே, 140 பேர் முன்பதிவு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X