பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட் எதிர்பார்ப்பு!நெகமத்தில் தீயணைப்பு நிலையம்: நிறைவேறுமா நீண்டநாள் கோரிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:தென்னை நார்உற்பத்தி அதிகம் நடைபெறும், நெகமம் சுற்றுப்பகுதியில், தீ விபத்து ஏற்படுவதால், பொருளாதார இழப்பை தடுக்க, தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நார் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த, நெகமம், செஞ்சேரிபுத்துார் பகுதியில், 250க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி களங்கள் செயல்படுகின்றன.
கடும் வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில், தீ விபத்தை தடுக்க, நார் உற்பத்தியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.பெரும்பாலும், நார் உற்பத்தி மேற்கொள்ளப்படும் இடங்களில், பெரிய தொட்டிகள் அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர் நிரப்பி வைத்துள்ளனர். இருப்பினும், தீ விபத்து ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.தென்னை நார் உற்பத்தியாளர் சங்க செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னை நார் உற்பத்தி மேற்கொண்டு, ஏற்றுமதி செய்து வருகிறோம். கடும் வெயில், எதிர்பாராத நிகழ்வுகளால், தீ விபத்து ஏற்பட்டு, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கிறோம்.வெயில் காலங்களில் நார் உற்பத்தி, காய்ந்த தென்னை மட்டைகள் மற்றும் இயந்திரங்களை பாதுகாக்க, தீயணைப்பு நிலையம் வேண்டும் என, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்படுகிறது.தற்போதைய நிலையில், 200க்கும் மேற்பட்ட நார் உற்பத்தி களங்களில், டேங்கர் லாரி அல்லது டிராக்டரில் டேங்கரை பொருத்தி, மோட்டார் மூலம் நீரை பாய்ச்சி தீயை கட்டுப்படுத்துகிறோம்.டேங்கில் நிரப்பப்படும் நீரானது, அரை மணி நேரத்தில் தீர்ந்து விடுவதால், தீயை கட்டுப்படுத்த மட்டுமே முடிகிறது. ஆனாலும், தீ பரவுவதை தடுக்க முடிவதில்லை.பெரியகளந்தை அருகே, 'இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்' எரிவாயு சிலிண்டர் 'பில்லிங்' ஸ்டேஷன் இருப்பதால், தீயணைப்பு நிலையம் கட்டாய தேவையாக உள்ளது.எனவே, நெகமத்தை சுற்றியுள்ள, 10 கி.மீ., துாரத்துக்குள் ஏற்படும் தீயை முற்றிலும் தடுக்கவும், பாதிப்பை குறைக்கவும் நெகமத்தில் தீயணைப்பு நிலையத்தை அவசியம் அமைக்க வேண்டும்.இந்த ஆண்டாவது தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, எம்.எல்.ஏ.,வும் துணைசபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டர், எம்.பி., சண்முகசுந்தரத்திடமும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளனர்.தமிழக அரசும் பட்ஜெட் கூட்டத்தொடரில், நெகமத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து, தென்னை நார் உற்பத்தி தொழிலையும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.தீயணைப்பு துறையினர் கூறுகையில், 'தற்போது, கிணத்துக்கடவு அருகேயுள்ள எட்டிக்குட்டையில், வாடகை கட்டடத்தில் செயல்படும் தீயணைப்பு நிலையம், தாமரைக்குளம் பகுதியில் சொந்த இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. அதேபோன்று, வடசித்துார் அல்லது, பெரியகளத்தை அருகே, மற்றொரு தீயணைப்பு நிலையம் அமைக்க அரசுக்கு கருத்துரு சென்றுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X