பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு

Added : பிப் 14, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனை அடுத்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.ரயில்வே ஸ்டேஷன் அருகே சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 11ம் தேதி மாலை திருவிளக்குவழிபாடு, புனிதநீர்கலச வழிபாடு, மூத்த பிள்ளையார், ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு,நிலத்தேவர் வழிபாடு நடந்து.அன்று இரவு, முளைப்பாலிகையிடல், எண் திசைக் காவலர் வழிபாடு, முதற்கால வேள்வி, நவகோள்கள் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், இறை சக்தியை எண் வகை மருந்து சாற்றி, கருவறையில் நிலைப்படுத்துதல் நடந்தது.நேற்று முன்தினம் காலை, சிலைகளை துாய்மைப்படுத்தி, ஆனைந்து ஆட்டி காப்பணிவித்தல், பூர்வாங்க வழிபாடுகள், இரண்டாம் கால வேள்வி, நவகோள்கள் வேள்வி, அருட்கலையேற்றல், மலர் வழிபாடு, பெரும்பேரொளி வழிபாட்டை தொடர்ந்து, 7:30 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.பேரூர் ஆதீனம் சிவசாந்தலிங்கர் அருட்பணி மன்றத்தினரால், திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட்டது.தொடர்ந்து, மகா அபிேஷகம், அன்னதானம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X