இடியும் நிலையில் சன்னிதி சீரமைக்க வலியுறுத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement
 இடியும் நிலையில் சன்னிதி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்தில், பழுதடைந்துள்ள திருகார்வாணப் பெருமாள் சன்னிதியை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்தில், திரு ஊரகம், திருகாரகம், திருநீரகம், திரு கார்வாணப் பெருமாள் என, நான்கு திவ்ய தேச சன்னிதிகள் உள்ளன.இதில், கார்வாணப்பெருமாள் சன்னிதியின் முன் மண்டபம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது; விழாமல் இருக்க, கம்பு வைத்து முட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை என, கூறப்படுகிறது.இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: நுாற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான, உலகளந்த பெருமாள் கோவிலை சுற்றி வரும் பக்தர்கள், கார்வாணப் பெருமாள் சன்னிதி முன் அமர்ந்து தான் ஓய்வு எடுப்பர்.

அங்கு பழுதடைந்துள்ள சன்னிதியை, பல ஆண்டுகளாக, அறநிலையத் துறை கவனிக்காமல் உள்ளது.அறநிலையத் துறை ஒப்புதல் கொடுத்தால், உபயதாரர்கள் சீரமைக்க தயாராக இருக்கின்றனர்; ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. இடிந்து விழும் முன், சன்னிதியை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X