பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றங்கரையில் பன்றி வளர்ப்பதா? கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

Added : பிப் 14, 2020
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில், பன்றி வளர்ப்பதை தடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு மடத்துக்குளம் மக்கள் அனுப்பியுள்ள மனு:மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம், கொழுமம், கண்ணாடிப்புத்தூர், உள்ளிட்ட பல கிராமப் பகுதிகளில், ஆற்றங்கரை மற்றும் வாய்க்கால் ஓரங்களில் குடிசை மற்றும் பட்டிகள் அமைத்து பன்றிகள் வளர்க்கப்படுகின்றன.ஒவ்வொரு இடங்களிலும் 20 முதல் 50 பன்றிகள் வளர்க்கப்படுவதால், இவற்றின் கழிவுகள் ஆற்று நீரில் கலக்கிறது. அமராவதி ஆற்றில், பல குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. இது தவிர, தரை மட்ட கிணறுகள் அமைத்து நீரை சேமித்து உபயோகிக்கின்றனர். குழாய்கள் மூலம் நீரை உறிஞ்சியும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.எனவே, இதுபோல குடிநீருக்கு பயன்படும் நீரில், பன்றிகளின் கழிவுகள் தேங்கி குடிநீர் மூலம் கலப்பதால், பலவித நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்க்க அதிகாரிகள் ஆய்வு செய்து, பன்றிகள் வளர்ப்பதை தடுக்க வேண்டும்.நீர்நிலைகள் இல்லாத இடத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக, வளர்க்கும்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X