பொது செய்தி

தமிழ்நாடு

இ.சி.ஆர்., பாலம், புறவழிப்பாதை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement
 இ.சி.ஆர்., பாலம், புறவழிப்பாதை  விரைந்து முடிக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்:கல்பாக்கம் பகுதியில் நடக்கும் கால்வாய் பாலம், புறவழிப்பாதை பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

கல்பாக்கம், இளையனார்குப்பம் பகுதி கால்வாயில், கிழக்கு கடற்கரை சாலை குறுக்கிடுகிறது. இந்த கால்வாயில் அமைக்கப்பட்ட பாலம், 2015 கனமழை வெள்ளத்தில் சேதமடைந்தது. போக்குவரத்திற்காக, தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு, வாகனங்கள் கடக்கின்றன. தற்போது, 24 கோடி ரூபாய் மதிப்பில், 60 மீ., நீளம், 20.7 மீ., அகலம், 5 மீ., உயர அளவில், நான்குவழி பாலத்தை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அமைக்கிறது.

பால பகுதியிலிருந்து, புதுப்பட்டினம் பகுதி வரை, 2 கி.மீ., தொலைவிற்கு, புறவழிபாதையும் அமைக்கப்படுகிறது.ஓராண்டிற்கு முன், இப்பணிகள் துவக்கியும், தற்போதும் முடிக்கப்படாமல், தாமதமாகிறது. இதனால், வாகனங்கள், குறுகிய தரைப்பாலத்தில், புதுப்பட்டினம் உட்புற சாலையில் கடப்பதில், இடையூறு ஏற்படுகிறது.போக்குவரத்து முக்கியத்துவம் கருதி, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X