பொது செய்தி

தமிழ்நாடு

8வது உலக அதிசயமாகுமா தஞ்சை பெரியகோவில்?

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement
தஞ்சாவூர்: உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.மன்னர் ராஜராஜ சோழன், தன், 25வது ஆட்சியாண்டில், கி.பி., 1003ல், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டத் துவங்கி, 1010ல், கட்டுமானத்தை நிறைவு செய்தார்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், முன்பு, ராஜராஜேஸ்வரர் கோவில் என்றே அழைக்கப்பட்டது. மராட்டியர்
tanjore,tanjore_temple,pragatheeshwar_temple,world_wounder,8th_wonder_of_the_world,wonders_of_the_world,தஞ்சை,பெரிய_கோயில்,உலக_அதிசியம்

தஞ்சாவூர்: உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரியகோவிலை இடம் பெற செய்யும் முயற்சிக்கு, ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.

மன்னர் ராஜராஜ சோழன், தன், 25வது ஆட்சியாண்டில், கி.பி., 1003ல், தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டத் துவங்கி, 1010ல், கட்டுமானத்தை நிறைவு செய்தார்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், முன்பு, ராஜராஜேஸ்வரர் கோவில் என்றே அழைக்கப்பட்டது. மராட்டியர் ஆட்சிக்கு பின், பிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படுகிறது.

கருங்கற்களால், 216 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட இந்த கோவில் கோபுரத்தில், கலச வடிவிலான மேற்கூரை, 80 டன்னில், ஒற்றை கல்லால் செய்யப்பட்டது. தமிழர் கட்டடக்கலைக்கு எடுத்துகாட்டாக விளக்குகிறது.


latest tamil newsகடந்த, 1987ம் ஆண்டு, 'யுனெஸ்கோ' என்ற ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், உலகப் பாரம்பரியச் சின்னமாக, தஞ்சை பெரிய கோவில் அறிவிக்கப்பட்டது. இக்கோவிலை காண, உலகம் முழுவதில் இருந்தும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், உலக அதிசய பட்டியலில், எட்டாவது இடத்தில், இக்கோவிலை இடம் பெற செய்ய, தஞ்சையைச் சேர்ந்த இன்ஜினியர்கள், டாக்டர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் என, அனைத்து தரப்பினரும் இணைந்து, ஒருங்கிணைப்பு குழுவை துவங்கி, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், சர்வதேச அளவில் உள்ள தமிழர்களிடையே, கையெழுத்து இயக்கம் நடத்தவும், இக்குழு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தொல்லியல்துறையின் கட்டுமான வல்லுனரும், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டு மான உறுப்பினருமான ராஜேந்திரன் கூறியதாவது: பெரியகோவிலை, உலக அதிசய பட்டியலில் இடம் பெற வைக்கும் முயற்சியை, கும்பாபிஷேக தினத்தில் இருந்து துவங்கியுள்ளோம். இக்கோவில் கட்டுமானம் முதல், சிற்பங்கள் வரை, அனைத்தும் அதிசயமானது.

உலக அதிசயத்தில், தஞ்சை கோவில் இடம்பெற, தமிழகம் மட்டு மின்றி, சர்வதேச அளவில், தமிழர்கள் ஒருங்கிணைத்து, 'ஆன்லைன்' ஓட்டெடுப்பு நடத்த உள்ளோம். அதன்பின், உலக அதிசய குழுவை, கோவிலுக்கு அழைத்து வந்து பார்வையிட செய்வோம்.உலக அதிசய பட்டியலில், தஞ்சை பெரிய கோவில் இடம் பெரும் வரை, எங்கள் பணி ஓயாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
14-பிப்-202017:06:13 IST Report Abuse
Indhuindian Tamil Nadu is not fit to promote tourism. People lack courtesy and helpfulness. They are steeped in past glories and achievements and don’t care to preserve and glorify them. Those in service industry ranging from material handlers in railway stations and bus terminus to hospitality industry lack courtesy and behave rudely. Pl visit Gujarat and see what they do to attract tourists- From Statue of Unity to Raan of Kutch festival.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-பிப்-202016:02:05 IST Report Abuse
Vijay D Ratnam பாரதபிரதமர் மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய மாதிரி, அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தையை தஞ்சை பெரிய கோவிலில் நடத்தினால் தஞ்சை பெருவுடையார் கோவில் உலக கவனம் பெறுமே. பிரிட்டிஷ் பிரதமர், ஃபிரான்ஸ் அதிபர், ஜெர்மன் சான்சலர், ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர், அரபு நாட்டு மன்னர்கள், இளவரசர்கள் போன்ற பவர்ஃபுல் டிப்ளோமஸிக்களுடனான பேச்சுவார்த்தையை தஞ்சை கோவிலில் நடத்தலாமே.
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
14-பிப்-202014:58:31 IST Report Abuse
dandy தமிழை வளர்க்க (????) அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகத்துக்கு நிதி சேர்த்த மாதிரி ..இதற்கும் நிதி சேர்க்கலாம் தெருவெங்கும் உண்டியல் குலுக்கலாம். 19 ம் நூறாண்டிலேயே OXFORD, PARIS..BERLIN பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ் பீடத்தை மூடிய பொது இந்த ஆர்வலர்கள் எல்லாம் எங்கு இருந்தார்கள் ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X