பொது செய்தி

தமிழ்நாடு

'ரிசர்வ் சைட்'கள் தானம் வேண்டும்! ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement
 'ரிசர்வ் சைட்'கள் தானம் வேண்டும்! ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தல்

கிணத்துக்கடவு:''வீட்டு மனை குடியிருப்பு பகுதிகளில், பொது ஒதுக்கீடு இடங்களை ஊராட்சிக்கு தானமாக பெற வேண்டும்,'' என, ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தது.முதல் கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் நாகராணி கலந்து கொள்ளவில்லை. துணைத் தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். பி.டி.ஓ., ஜெயக்குமார், பி.டி.ஓ., (ஊராட்சிகள்) சாய்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் அதிகாரிகள் அறிமுகப்படுத்தி கொண்டனர். ஒன்றிய அலுவலக செலவினங்கள் உட்பட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. மொத்தம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கவுன்சிலர் ஜெகன் பேசியதாவது:சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகரில், 1994ம் ஆண்டு அமைக்கப்பட்ட வீட்டு மனை குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரோடு மற்றும் பூங்கா இடங்களை ஊராட்சிக்கு தானம் பத்திரம் எழுதி கொடுக்கவில்லை.இதனால், இக்குடியிருப்பில் தார்ரோடும், பூங்கா வசதியும் செய்யப்படாமல் உள்ளது. வீட்டுமனை பிரித்த உரிமையாளர்கள் உயிருடன் இல்லாததால், ஊராட்சிக்கு தானம் வழங்க முடியாமல் உள்ளது.இதற்கு, உரிய நடவடிக்கை எடுத்து, பொது ஒதுக்கீடு இடங்களை ஊராட்சிக்கு தானம் பத்திரம் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.சொலவம்பாளையம், ஆதிதிராவிடர் குடியிருப்பின் மேற்கு பகுதியில் குட்டை உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் நிறைந்து, குடியிருப்புக்குள் மழை தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனை தடுக்க வெள்ள தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.குமாரபாளையம் கிராமத்தில், 10 ஆண்டுக்கு முன் இருந்து மக்கள் தொகை கணக்குப்படி மேல்நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. தற்போது, கிராமத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.இதற்கு ஏற்ப, கூடுதல் மேல்நிலைத்தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இம்மூன்று கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து அடுத்த ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.கூட்டத்தில், வேளாண் துறையினர் விவசாயிகளுக்குண்டான திட்டங்கள் குறித்தும், தென்னையை தாக்கும் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்தும் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X