பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்க பள்ளி: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

மதுராந்தகம்:அருகாமை கிராமங்களுக்கு நடந்து செல்ல, சிறுவர்கள் சிரமப்படுவதால், மேட்டுப்பாளையத்தில், அரசு தொடக்கப் பள்ளி துவக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

மதுராந்தகம் ஒன்றியம், அரையப்பாக்கம் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில், 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இப்பகுதியில், அங்கன்வாடி மையம் மட்டுமே செயல்படுகிறது. இதுவரை, அரசு தொடக்கப் பள்ளி அமைக்காததால், இப்பகுதி குழந்தைகள் சிரமப்படுகின்றனர். ஒரு கி.மீ., உள்ள ஜானகிபுரம் மற்றும் அரையப்பாக்கம் கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, நடந்து சென்று படிக்கின்றனர். வெயில் மற்றும் மழை காலத்தில், பள்ளிக்கு சென்று வரமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, மேட்டுப்பாளையம் கிராமத்திலேயே தொடக்கப் பள்ளி வசதி ஏற்படுத்தி தர, சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேட்டுப்பாளையம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X