பொது செய்தி

தமிழ்நாடு

குண்டத்து காளியம்மன் திருவிழா

Added : பிப் 14, 2020
Advertisement

ஆனைமலை:ஆனைமலை அடுத்த பழைய சர்க்கார்பதி குண்டத்து காளியம்மன் கோவில் திருவிழாவில், பழங்குடியின மக்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆனைமலை அடுத்த பழைய சர்க்கார்பதி பழங்குடியின கிராமத்தில், பழமையான குண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, குண்டம் திருவிழா ஜன., 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த, 10ம் தேதி விநாயகர் பொங்கல் பூஜை, தீர்த்தம் எடுத்தல் நடந்தது. நேற்று முன்தினம் காலை குண்டம் திறப்பு, தீர்த்தம் எடுத்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டத்தில் பூ வளர்த்தல் நடந்தது. நேற்று காலை, 4:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், 9:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதமிருந்த பழங்குடியினர் பக்தியுடன் பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.அதன்பின், தேரோட்டம், முளைப்பாரி,மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து அசத்தினர். கோவில் நிர்வாகக்குழுவினர், பொள்ளாச்சி சேவாலயம் அமைப்பினர் தலைமையில் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று, (14ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் நிலை தேரோட்டம், நாளை மூன்றாம் நிலை தேரோட்டமும், அபிஷேக பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X