பொது செய்தி

தமிழ்நாடு

தொல்லியல் அனுமதி சீட்டு நவீன முறையில் வழங்கல்

Added : பிப் 14, 2020
Advertisement
 தொல்லியல் அனுமதி சீட்டு நவீன முறையில் வழங்கல்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள, பல்லவர் கால சிற்பங்களை, உள், வெளிநாட்டுப் பயணியர் காண்கின்றனர்.தொல்லியல் துறை, சிற்பங்களை நிர்வகித்து, பயணியரிடம், நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறது.

இந்தியருக்கு, தலா, 40 ரூபாய், வெளிநாட்டினருக்கு, தலா, 600 ரூபாய்.கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு பகுதிகள் அருகே, கட்டண மையங்கள் உள்ளன.ஓரிடத்தில் பெறும் நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்பங்களையும் காணலாம். தற்போது, பயணியர் குவியும் நிலையில், இச்சீட்டை, வரிசையில் நின்று பெற, தாமதமாகிறது.

இதை தவிர்க்க, இத்துறை, கனரா வங்கியுடன் இணைந்து, 'க்யூ ஆர் கோட் ஸ்கேனிங்' முறையை, தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. சீட்டு வழங்கும் மையங்களில், க்யூ ஆர் கோட் இடம்பெற்ற, பலகை வைக்கப்பட்டு உள்ளது.பயணியர், இதை ஸ்கேன் செய்து, நாட்டின் பெயர், நுழைவுச்சீட்டு எண்ணிக்கை, மொபைல் போன் எண் போன்ற விபரங்களை பதிவிட்டு, தொகை செலுத்தி, போனில் அனுமதி சீட்டை பெறலாம்.

இதை, நுழைவிடத்தில் இருப்போரிடம் காண்பித்தால், அனுமதி வழங்கப்படும். கனரா வங்கி, காஞ்சிபுரம் வட்டார, உதவி பொது மேலாளர், ஜி.செல்வராஜ், நேற்று, இம்முறையை துவக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X