பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரியத்தில் புதிதாக பிரிவு அலுவலகங்கள்: விரைவில் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement

உடுமலை:உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டத்தில், புதிதாக இரு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்படுகிறது.உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டத்தில், வீட்டு மின் இணைப்புகள், விவசாயம், வணிகம், தொழிற்சாலை மின் இணைப்புகள் என, 1.45 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
இக்கோட்டத்தில், 17 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. மின் இணைப்புகள் அதிகரித்த நிலையில், மக்கள் எளிதில் மின் இணைப்பு பெறுதல், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட மின் வாரிய சேவைகளை எளிதில் பெறும் வகையில், கூடுதல் மின் இணைப்புகள் உள்ள பிரிவு அலுவலகங்களை பிரிக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.அதன் அடிப்படையில், உடுமலை கோட்டத்தில் புதிதாக இரண்டு, பிரிவு அலுவலகங்கள் மின் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், பள்ளபாளையம் மற்றும் பாப்பான்குளம் பகுதிகளில், புதிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது.உடுமலை மேற்கு மற்றும் தளி பிரிவு அலுவலகங்களிலிருந்த, பெரியகுளம், லிங்கமாவூர், குறிச்சிக்கோட்டை, கொங்கலக்குறிச்சி பகுதிகள் பள்ளபாளையம் பிரிவு அலுவலகத்தில் இணைக்கப்படுகின்றன.
அதே போல், மடத்துக்குளம் தாலுகா, பாப்பான்குளம் பிரிவு அலுவலகத்திற்கு, செங்கழனி புதுார், ரெட்டிபாளையம், கண்ணாடிபுத்துார், சாமராயபட்டி, பெருமாள் புதுார் பகுதிகள் இணைக்கப்படுகின்றன. புதிய அலுவலகம், உதவி பொறியாளர், மின் வாரிய அலுவலர், ஊழியர்கள் என புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.உடுமலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் கூறுகையில்,'உடுமலை கோட்டத்தில், புதிதாக, பள்ளபாளையம், பாப்பான்குளம் ஆகிய பிரிவு அலுவலகங்கள் அமைக்க, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. விரைவில் துவக்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X